தன் கை யார் தலையில் பட்டாலும், அவர் பஸ்மமாக ஈசனிடம் வரம் பெற்ற பஸ்மாசுரன், அவர் தலையிலேயே கைவைக்கப் பாய்ந்தான். பஸ்மாசுரனிடமிருந்து சிவன் மறைந்து ஐவிரலிச்செடிப் பழமாக, அதனை அவன் ஆட்டுருக்கொண்டு மேய வந்தான்.
மாயன் (அ)ரம்பை (மோகினி) அவதாரமானார். அவனை மயக்கித் தன்னுடன் சேர வேண்டுமாயின், நீராடி வரச்சொன்னார். அவனும் அருகில் நீர் இன்மையால் தவிக்க, கோமியம் சிறிது எடுத்துத் தலையில் வைக்கக் கூறினாள் (அ)ரம்பை. அவனும் வரத்தினை மறந்து கோமியத்தைத் தலையில் வைக்கத் தொட, பஸ்மடானான். ஈசனை, (அ)ரம்பையான மாயன் ஐவிரலிப் பழத்திலிருந்து வெளியில் அழைக்க, அவரும் மாயனின் (அ)ரம்பையின் வடிவுகண்டு மையல்கொண்டு தனது சுக்கிலத்தின் மூன்று துளிகளை விட, மாயனால் அவை ஐயன், நாச்சிமுத்து, கூடலூர் உள்ள அருங்கரை அம்மன் என்று மூன்றாகின. மலையாளம் (கொல்லிமலை) வாழ்ந்த பூதமான முனி, நரமாமிசம் புடைத்துண்டு வந்ததனை அடக்கித் தனக்கு கணமாக்கிக்கொண்டார் நாட்டராயன்.
கோயில் கட்டிய மாந்தரஞ்சேரல்:
சேரன் நாடாகிய கொங்கதேசத்தில் களப்பிரரை விரட்ட 108000 வேட்டுவர் சேரனால் அமர்த்தப்பட்டனர். இவர்கள் கூன் பாண்டியன், திருஞானசம்பந்தர் காலத்தில (circa 600 CE) நொய்யலுக்கு வடக்கில் ஏற்கனவே நற்குடி 48,000, பசுங்குடி 12,000 ஆதொண்டன் காலத்தில் வந்தோருக்குத் துணையாய் வடக்குத்தலைவாசல் ஆறு நாடுகளைப் பூர்வீகமாகக் அமர்த்தப்பட்டுச் சேரனது பெருந்தாலி, குல குருக்கள், நாட்டு அருமைச்சீர்கள், மங்கல வாழ்த்து, வீரமாத்தி (வீரமகாசதி, கைம்மை நோன்பு) ஆகியவை பெற்ற பெருந்தாலி பெற்ற கொங்க வேட்டுவர் (Vettuva Gounder MBC பிரிவு): https://kongukulagurus.blogspot.com/2009/09/52_1.html
பின்னர் பாண்டியர் தனியாக அழைத்துவந்த வடுக வேடுவரான பூவிலுவர் (பூலுவக்கவுண்டர் - Pooluva Gounder BC), காவிலுவர் (மங்கிலியம் அணியாப் பட்டாலி வேட்டுவர் - Vettuva Gounder MBC பிரிவு) , மாவிலுவர் (வலையர் பிரிவு - Mutharaiyar MBC ) ஆகியோர் சேரரது கடைசிக்காலங்களில் (circa 800 CE) தெற்கு, மேற்கு, கிழக்குத்தலைவாசல் ஆறுநாடுகளில் அமர்த்தப்பட்டனர்: https://kongupattakarars.blogspot.com/2011/03/blog-post_2781.html
சுந்தரமூர்த்தி நாயனார் காலத்தின் இறுதியில் (circa 850) வேடர் (Vettuva Gounder DNC) கிழக்குத்தலைவாசல் ஆறுநாடுகளில் செட்டி சிவபிராமணர்களால் பாண்டியர் ஆதரவில் அமர்த்தப்பட்டனர்.
நமது சேர மன்னரான மாந்தரஞ்சேரல் ரிஷபகிரிச் சோழன் மகளை மணந்தபோது, சீதனமாக சோழன் நற்குடி 8000 வெள்ளாளர்களயும், 500 செட்டிமாரையும் சேரனுக்கு அளித்தான். சேரன் தாராபுரமாகிய விலாடபுரி சூழ் தெற்குத் தலைவாசல ஆறுநாடுகளில் நற்குடி 8000 வெள்ளாளரையும், செட்டிமாரையும் குடியமர்த்தி மந்திரி, பிரதானி (பட்டக்காரர்கள் எஜமானர்), காணியாளர் (கவுண்டர்) போன்றவற்றை வழங்க, பாண்டியரின் காவிலுவ வேட்டுவருக்கும் (மங்கிலியமில்லா பட்டாலி வேட்டுவர்) மாந்தரஞ்சேரலுக்கும் பிணக்கு ஏற்பட்டது.
பாண்டியன் காவிலுவருக்குத்துணையாக படையெடுத்துவர, சேரன் அயிரை மலை (ஐவர் மலை) அருகே ஒரு போர்க்களத்தில் அவர்களை வீழ்த்தி, பொதினி (பழனி) வரை அவர்கள் தோற்றோடச்செய்தான்.
அதன்பின், தன்னாட்டில் நடுநிலமான காங்கய நாட்டு வள்ளியறச்சல் காணியில், மாந்தபுரம் என்று தனது பெயரால் ஒரு நகர் அமைத்து, அங்குள்ள சாத்தனாகிய ஐயன் பிறந்த ஊஞ்ச வனத்தில் மந்திரமுறைமையினால் யந்திர சாதனம் போடுவித்து, ஐயன், சாத்தன் (சமஸ்: ஶாஸ்தா) (ஐயன்,ஐயனார்,ஐயப்பன்,ஐயநாயக,ஆரியன்) ஒரு கோயில் அமைத்தார். அதனில் பூதம் (முனி) ஒன்றையும் ஆவாகனித்தார்: (கொல்லிமலையின் மலையாள முனி).
ஶ்ரீ பெண் முனி
இண்டியன் சாக்கிய பௌத்த சூனியவாதமான அசோகச் சக்கர சர்க்காரால் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்ட தொல்பொருள் சின்னமான மாந்தபுரம் மாந்தரஞ்சேரலது நாட்டராயன் நாச்சிமுத்து ஐயன் கோயில்
தனது நாட்டில் பிறந்து அதனை ஆள்பவன் ஐயன் என்பதால் நாட்டு+ராயன் நாட்டராயன் என்றும், தமிழில் நாட்டரையன் என்றும் இக்கடவுள் பெயர் விளங்கிவருகிறது. இந்நிகழ்ச்சியினைக் கூறுவதே மாந்தரஞ்சேரல் மெய்க்கீர்த்தியாகும்:
மாந்தரஞ்சேரல் பெயரில் மாந்தபுரத்திலேயே மாந்தீஶ்வரர் என்ற இஶ்வரன் கோயில் உள்ளது. அம்மன் இல்லாததால் இது மன்னனது பள்ளிப்படையாகவும் இருக்கலாம். வள்ளியறச்சல், கண்ணபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும் மாந்தீஶ்ரர்கள் உள்ளன.
2000க்குப்பிறகு சேரனது யந்திர, மந்திரப்பிரதிஷ்டையை இண்டியா சர்க்காரது டமில்நாடு சர்க்காரது ஹிண்டூ ரிலிஜியஸ் ஏண்ட் சேரிடப்ல் எண்டோமண்ட்ஸ் கோயில் அழிப்புப் பிரிவு, இத்தொன்மைக் கோயிலை, எமது W.P 574/2015 ஜட்ஜ்மென்டுகளையும் மீறி இடித்துத் தரைமட்டமாக்கியது. அதன்மேல் முற்றிலும் ஸ்தானபேதமாக ஆகமங்களை மீறி புதிதாக ஒரு கட்டடத்தைப் பெரிய வசூல்வேட்டை போட்டுக் கட்டியுள்ளது. இதற்குத்துணைபோன உள்ளூரார் சிலரும் அதற்குள் பரிதாபகரமாக மாண்டனர். தற்போது மாந்தீஶ்வரருக்கும் அதே நிலை.
இண்டியன் சாக்கிய பௌத்த சூனியவாதமான அசோகச் சக்கர சர்க்காரால் 2024இல் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்ட தொல்பொருள் சின்னமான மாந்தபுரம் மாந்தரஞ்சேரலது மாந்தீஶ்வரர் கோயில்
எச்சரிக்கை: சாக்கிய புத்தனும் ஜைன சமணனும் தமிழர் விரோதிகளான களப்பிர நாத்திகரால் உட்புகுந்தோர் என்பது தெளிவு. அவற்றை ஊண் உயிர் தந்து தமிழர் வேரறுத்தனர். இன்றும் சிங்களரும், வடவரும் முறையே இம்மதங்களை தமிழர் விரோதமாகக் கொண்டுவருவதனைக் காண்கிறோம். இவற்றை தமிழருள் புகுத்துவது இயலாது என்பதால், இவைபோன்றே பாஷண்ட மதங்களான அறுவகைச் சமணங்களுள் ஒன்றான மக்காளி கோஷாலாவின் ஆஜீவிக மதத்தினை ஆசீவகம் எனத் தமிழ்பபடுத்தியும், அனைத்துச் சாத்தன் வழிபாடுகளும் இம்மூன்று நாத்திகங்களுடன் வந்தவை என்பதுபோல ஆதாரங்களற்ற பிரச்சாரங்கள் ஆனந்த விகடன் உள்ளிட்ட நாத்திக ஜெசூட் டமில் டேஷியவாதிகளாலும், பிரீமேசானியர்களாலும் நடத்தப்படுகின்றன. ஆனால் நம் சேர இளவலாள இளங்கோவடிகள் சிலப்பதிராத்தே தெளிவாக இம்மூன்று மதங்கள் உள்ளிட்ட 96 வகைப் பாஷண்டங்கள் (வேதப்புறம்பு வழிகேடுகள்) என்றும், அவர்கள் வழிபடும் சாத்தன்களில் ஒன்றுதான், 'ஓர் பாசண்டச் சாத்தன்' என்று இருந்ததனையும் விளக்குகிறார்:
ஜைனத்தில் பிரம்ம யட்சன் என்று ஒன்று கூறப்படுகிறது. அது நமது சாத்தன் போன்ற தோற்றத்துடன் இருப்பினும் வேறானது. 'ஐயன்' என்ற சிறப்புப்பெயர் கொண்ட அரிகரபுத்திரனான நமது சாத்தனான நாட்டரயன், மாசாத்தன் (மஹா ஶாஸ்தா), தர்ம சாஸ்தா என்ற தனிச்சிறப்புப் பெயர்களை உடையவராவார். இச்சமணச் சாத்தனும், சைவரான இளங்கோவடிகள் முழுச் சக்தியற்றதாகக் கூறும் பாஷண்ட ஶாஸ்தா என்பதில் ஐயமில்லை. இவையன்றி மலையாளத்தில் 'குட்டி சாத்தன்' முதலான பல்வேறு சாத்தன்கள் உள்ளன. நமது ஐயன் எனும் மஹா ஶாஸ்தா சாத்தன் நாட்டரயன் வேறு.
வேதத்தில், ஆகம, புராண, இதிகாச திருமுறைகளில் கூறப்படும் சிவனது பூதப்படைகளது (முனி முதலானவர்கள்) பூதநாதனான ஐயன் எனும் மகா சாத்தனே நாட்டரயன் எனும் நமது சேரதேசச் சாத்தன்:
முதல் பகுதி: பிரபஞ்சத்தின் அதிபதிபொருள்: உலகைப் படைத்தவர் (தாதா), அதை வழிநடத்துபவர் (விதாதா), எல்லாவற்றையும் சமமாகப் பார்க்கும் உன்னதமான பார்வையைக் கொண்டவர் (பரமோத ஸம்த்ருக்), உயிர்களின் தலைவன் (ப்ரஜாபதி), எல்லாவற்றிற்கும் மேலானவர் (பரமேஷ்டீ) மற்றும் பிரபஞ்சத்தின் ஒளியாகத் திகழ்பவர் (விராஜா) அவரே ஆவார்.வேத துதிகளும், மந்திரங்களும், வழிபாடுகளும் யாருக்கு உரித்தானதோ, அந்த மாபெரும் சாஸ்தா என்னும் பேரரசுக்கு நாம் அனைவரும் தலைவணங்கிப் பணிகிறோம்.
இரண்டாம் பகுதி: வழிகாட்டும் ஆன்மீகத் தலைவன்பொருள்: உலகத்தோரே! அனைவரும் ஒன்று கூடுங்கள். இந்த பிரபஞ்சத்தின் முழுமையான அதிபதியாக, உங்களை வழிநடத்தும் ஆசானாக (சாஸ்தா) அவரே விளங்குகிறார்.அவருடைய உன்னதமான ஆன்மீக ஞானத்தைப் பின்பற்றி, உங்கள் உள்ளத்தில் அன்பையும் மகிழ்ச்சியையும் நிறைத்துக் கொள்ளுங்கள். அவர் காட்டும் நேர்மையான வழியைப் பின்பற்றி, உலகிலுள்ள அனைத்து உயிர்களும் இன்புற்று வாழட்டும்.
மூன்றாம் பகுதி: சாஸ்தா காயத்ரி மந்திரம்பொருள்: பூதகணங்களின் தலைவனான பூதநாதனை நாம் அறிவோமாக. பரமேஸ்வரனின் பவனது (சிவனின்) திருக்குமாரனான அந்த இறைவனை நாம் தியானிப்போமாக. அந்த சாஸ்தா (ஐயப்பன்) நம்முடைய புத்தியைத் தூண்டி, நமக்கு நல்வழியைக் காட்டி அருளட்டும்.
யஜுர் வேதம் தைத்திரிய ஆரண்யகத்தில்:
3 வது பிரஶ்னம், 21, 35ஆம் சந்தங்களில்:
விளக்கம்:
21. எல்லாம் (சிவன், விஷ்ணு) ஒன்றுபட்டிருக்கும் இடத்தில், உள்ளே பிரவேசித்து, பிறந்து, அனைத்திற்கும் ஆத்மாவாக விளங்கும் அவர், புரிதலுக்கு அப்பாற்பட்டவர்; அவரே அனைத்துப் பொருட்களுக்கும் (பூதங்கள்) அதிபதியான சாஸ்தா.
35. அனைத்து யக்ஞங்களிலும் யஜமானனான ஹோதாவாக இருப்பவன் சாஸ்தா.
பிரம்மாண்ட புராணத்தில் லலிதா ஸஹஸ்ரநாமம் வரும் லலிதோபாக்யானத்திலும் சாஸ்தா பிறப்பு ஹயக்ரீவரால் அகத்தியருக்கு அருளப்படுகிறது:
"இவ்வாறு, தோன்றி அசுரர்களை மயக்கிய தெய்வீக அன்னை, மோகினி (தெய்வீக மோகினி) என்று அழைக்கப்பட்டாள். கைலாசத்தில் தங்கியிருந்த சிவன், இந்த நிகழ்வுகளை அறிந்து, விஷ்ணுவின் புதிய வடிவத்தின் சிறப்பைக் குறித்துக்கொள்ள விரும்பினார். சிவன் தன் துணைவியான பார்வதியுடன் விஷ்ணுவின் இருப்பிடமான வைகுண்டத்திற்குச் சென்று, மோகினி வடிவத்தைக் காட்டுமாறு அவரை வற்புறுத்தினார். விஷ்ணு ஆம் என்றோ இல்லை என்றோ எதுவும் கூறாமல் திடீரென மறைந்துவிட்டார். சிவன் விஷ்ணுவைத் தேடிக்கொண்டிருந்தபோது, தற்செயலாக ஒரு புதிய இடத்தை அடைந்தார், அங்கும் அவர் தொடர்ந்து தேடினார். அங்கே அவர் வீணையின் இசையைக் கேட்டார். அவர் ஒரு அழகிய இளம் பெண்ணைக் கண்டார். இந்த மோகத்தை அடக்க முடியாமல், சிவன் அவளை அணைத்துக்கொண்டார். உடனடியாக ஒரு மகன் பிறந்தான். அவனுக்கு சாஸ்தா (ஆட்சி செய்பவன்) என்று பெயரிடப்பட்டது. அவன் சிவனின் படையில் தளபதியானான். உடனடியாக அந்தப் பெண் மறைந்துவிட்டாள். அவள் விஷ்ணுவின் வடிவமான மோகினி என்பதை சிவன் உணர்ந்தார். அவர் அவளது அழகைப் பாராட்டிவிட்டு, பார்வதியுடன் கைலாசத்திற்குத் திரும்பினார். இவ்வாறு தெய்வீக அன்னை மோகினியாக அவதாரம் எடுத்து, தேவர்களின் செயல்களுக்கு வெற்றியை அருளினார்.
அந்தக் கதையைக் கேட்ட அகஸ்தியர், “ஹயக்ரீவா! கலியுகத்தில் பரசக்தியின் (தெய்வ அன்னை, உன்னத சக்தி) எந்த வடிவம் பக்தர்களுக்கு உணவையும் முக்தியையும் வழங்கும் என்பதைத் தயவுசெய்து எனக்கு விரிவாகத் தெரிவி” என்றார்."
4. இதிகாசங்களில்:
நம் சடையப்ப வள்ளல் உள்ளிட்டோர் ஆதரித்துப் பாடப்பட்ட கம்பராமாயணத்தில், சுந்தர காண்டம், ஊர் தேடு படலத்தில், இலங்கை நகர மாடவருணனை (4942-4949):
4952.போர் இயன்றன தோற்ற என்று
இகழ்தலில், புறம்போய்
நேர் இயன்ற வன் திசைதொறும்
நின்ற மா நிற்க,
ஆரியன் தனித் தெய்வ மாக்
களிறும், ஓர் ஆழிச்
சூரியன் தனித் தேருமே,
இந்நகர்த் தொகாத!
விளக்கம்: ஆரியனது (அய்யன் என்பது மஹா சாஸ்தாவின் சமஸ்கிருத பெயரான ஆரியன் என்பதன் பிராகிருதம், ஐயன் என்பது தமிழ்) தெய்வீகமான யானை வாகனத்தையும், சூரியனது தனித்தேரினையும் தவிர அனைத்தும் இராவணனால் கைபற்றப்பட்டு இலங்காபுரியில் இருந்தன.
மஹாபாரதம்:
மஹாபாரதத்தில் பீஷ்மபிதாமஹர் தருமருக்கு அருளிய விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் ஶாஸ்தாவை மாயனது 206 வது நாமமாகவே குறிப்பிடுகிறார்.
பதிக எண்: 4.32 பயற்றூரில் பாடியதில் (தருமசேனன் என்று சமணராக மதம்மாறி இருந்து, பின் சைவத்திற்கு மீண்டவர்):
"பார்த்தனுக்கு அருளும் வைத்தார் பாம்பு அரை ஆட வைத்தார்
சாத்தனை மகனா வைத்தார் சாமுண்டி சாம வேதம்
கூத்தொடும் பாட வைத்தார் கோளரா மதிய நல்ல
தீர்த்தமும் சடையில் வைத்தார் திருப்பயற்றூரனாரே" என்கிறார்.
விளக்கம்:
பார்த்தனுக்கு (அர்ச்சுனனுக்கு) அருள் வைத்து பாசுபதம் தந்த பெருமான், தனது இடுப்பினில் பாம்பினை இறுகக் கட்டி ஆடுமாறு செய்கின்றார். சாத்தனைத் தனது மகனாகக் கொண்டுள்ள பெருமான், காளியை சாமவேதம் பாடியவண்ணம் கூத்தாடச் செய்தவர் ஆவார். அவர் வலிமை பொருந்திய பாம்பு, சந்திரன் மற்றும் நல்ல தீர்த்தமாகிய கங்கையையும் தனது சடையில் வைத்தவர் ஆவார். அத்தகைய பெருமான் தான் திருப்பயற்றூரில் உறைகின்றார்.
Comments
Post a Comment