Posts

Showing posts from February, 2018

நாட்ராயன் நாச்சிமுத்து

Image
மாந்தரஞ்சேரல் காலத்துத் தொன்மையான ஶ்ரீ நாட்டராயன் நாச்சிமுத்து சாமிகள் (இண்டியா சர்க்காரால் இடித்து அகற்றப்பட்டது) மாந்தபுரம் நாட்டரயன் தலபுராணம்: (அ)ரம்பையாகிய மாயன்  (இண்டியா சர்க்காரால் இடிக்கப்பட்ட மாந்தரஞ்சேரல் காலச்சிலை) தன் கை யார் தலையில் பட்டாலும், அவர் பஸ்மமாக ஈசனிடம் வரம் பெற்ற பஸ்மாசுரன், அவர் தலையிலேயே கைவைக்கப் பாய்ந்தான். பஸ்மாசுரனிடமிருந்து சிவன் மறைந்து ஐவிரலிச்செடிப் பழமாக, அதனை அவன் ஆட்டுருக்கொண்டு மேய வந்தான். மாயன் (அ)ரம்பை (மோகினி) அவதாரமானார். அவனை மயக்கித் தன்னுடன் சேர வேண்டுமாயின், நீராடி வரச்சொன்னார். அவனும் அருகில் நீர் இன்மையால் தவிக்க, கோமியம் சிறிது எடுத்துத் தலையில் வைக்கக் கூறினாள் (அ)ரம்பை. அவனும் வரத்தினை மறந்து கோமியத்தைத் தலையில் வைக்கத் தொட, பஸ்மடானான். ஈசனை, (அ)ரம்பையான மாயன் ஐவிரலிப் பழத்திலிருந்து வெளியில் அழைக்க, அவரும் மாயனின் (அ)ரம்பையின் வடிவுகண்டு மையல்கொண்டு தனது சுக்கிலத்தின் மூன்று துளிகளை விட, மாயனால் அவை ஐயன், நாச்சிமுத்து, கூடலூர் உள்ள அருங்கரை அம்மன் என்று மூன்றாகின. மலையாளம் (கொல்லிமலை) வாழ்ந்த பூதமான முனி, நரமாமிசம் புடைத்துண்டு...